ஆறாம் அறிவு சேர்ந்து உருவாக்கிய ஏழாம் அறிவு தீபாவளி தினத்தன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக களம் இறங்கியது. ஆனால் வந்த வேகத்தில் இந்த படம் ரசிகர்களை திருப்தி செய்யத் தவறிவிட்டது.
இதனாலேயே ஏழாம் அறிவுக்கு மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டுவிட்டது. ஏழாம் அறிவு படத்தின் ஆடியோ வெளியீடு முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உருவாக காரணமே ஏ.ஆர். முருகதாஸ், சூர்யா, ஸ்ருதி, ரெட் ஜெயன்ட் போன்றவர்கள்தான், என்றாலும்
ஏழாம் அறிவு ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே மீடியாக்களில் விளம்பரத்தை துவக்கியது ரெட் ஜெயன்ட்.
ஏழாம் அறிவு ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே மீடியாக்களில் விளம்பரத்தை துவக்கியது ரெட் ஜெயன்ட்.
இந்த விளம்பரங்கள் மக்கள் மத்தியில் ஏழாம் அறிவுக்கு இருந்த எதிர்பார்ப்பை இன்னும் எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது.
ஒரு படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அள்வோடு இருந்தால் நல்லது. அதைவிட்டுவிட்டு ஏழாம் அறிவு எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே சினிமா ரசிகர்களை அழைத்துச் சென்றது.
எனவே, மிகப்பெரும் எதிர்பார்ப்புடனே தீபாவளி அன்று தியேட்டருக்குள் நுழைந்தார்கள் ரசிகர்கள். ஆனால், அவர்கள்து எதிர்பார்ப்புக்கு ஏற்ற அளவுக்கு தீனி போடவில்லை ஏழாம் அறிவு. இதனாலேயே தீபாவளி படங்களில் ஏழாம் அறிவுக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் எந்தவித எதிர்பார்ப்பையும் உருவாக்காமல் வந்த வேலாயுதம் சுமார் என்றாலும் தீபாவளி படங்கள் ரேஸில் ஏழாம் அறிவை முந்தியிருக்கிறது.
0 comments:
Post a Comment