ஈழத்திலிருந்தும் திரைப்படத்துறைக்குள் நுழைகிறார்கள் இளம் படைப்பாளிகள். கரையேறுவோம் என்ற நம்பிக்கையில் தான் குதிக்கிறார்கள் காட்டாற்றில்.
அந்த வகையில் கூட்டாளி திரைப்படத்தின் இயக்குனரான நிரோஜனுக்கு ஒரு சல்யூட்.
பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் திரைப்படத்தை திறம்பட எடுத்து முடித்திருக்கிறார்.
எப்போதும் எல்லாத்துக்கும் மக்கள் போராடியே ஆக வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்ட ஈழத்திலிருந்து, எமது மக்களின் அவல வாழ்வை உலகின் கண் முன் கொண்டு வந்து காட்டுவதற்கு திட சங்கற்பம் பூண்டிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
ஆம், தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று
மிக பிரமாண்டமான தயாரிப்பில் வெளிவருகிறது “மண்ணும் சிவந்தது” திரைப்பட இயக்குனரின் அடுத்த படைப்பான “கூட்டாளி” திரைப்படம்.
ஈழத்தமிழன் சினிமா தயாரிப்பதிலும் பார்க்க சந்திரமண்டலத்துக்கு கால்நடையாக சென்று வந்து விடலாம்... அவ்வளவு கடினமானது... பாதையும் துயரமானது... பல்வேறு தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு காட்சிகளையும் எடுபதற்கு போராட வேண்டும். அவமானங்களையும் சந்திக்க வேண்டும்.
அந்த வகையில் ஈழத்து வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்துள்ளது "கூட்டாளி" திரைப்படம்.
உலகச் சினிமாவினுள் ஈழச் சினிமா நுழைவதற்கான முதலாவது படிக்கல்...
இந்த திரைப்படத்தில் சில காட்சிகள் பதிவு செய்யப்பட்ட விதம் இதுவரை எந்த தமிழ்ச் சினிமாவிலும் காண முடியாதது.
இந்த திரைப்படத்துக்குப் பின்னால் பலரின் உண்மையான உழைப்பு இருக்கின்றது.
ஈழத்தில் யதார்த்தமான சினிமா தயாரிப்பதற்கான எந்தவித புறநிலைகளும் இல்லை..
ஈழத்தமிழர்கள் தொடர்பாக தமிழகத்திலும் கூட இன்னும் சரியானதொரு புரிந்துணர்வு ஏற்படவில்லை..
ஈழச் சினிமா, தமிழகச் சினிமாக்களிடையே பல்வேறு வகையான நுண்ணிய வேறுபாடுகள் காணப்படுகின்றன...
இதுவரை தமிழகத்தில் வெளிவந்த சினிமாக்களில் ஈழப்பிரச்சினை தொடப்பட்டு விடப்பட்டிருக்கிறது. ஓரளவேனும் பதிவு செய்யப்படவில்லை.
தமிழகச் சினிமாக்களில் பொதுவாக ஒரு பாடல் காட்சிக்கு 32 ஜோடி முலைகளை வைத்து விளம்பரம் தேடுவது போல ஈழச் சினிமாவில் பதிவு செய்து விட முடியாது.
உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடம் தமிழகச் சினிமாவுக்கு கிடைக்கும் பேராதரவு ஈழச் சினிமாவுக்கு கிடைக்காமல் போகின்றமை துரதிஷ்டவசமானதே.
இந்த நிலை அடியோடு மாறவேண்டும். ஈழச் சினிமாவும் உலகத் தரத்துக்கு உயர வேண்டும்.
அப்போது தான் எங்களின் போராட்டத்தின் யதார்த்த நிலை உலக அரங்குக்கு தெளிவாக எடுத்துச் செல்லப்படும்.
போராட்டமே வாழ்க்கையான ஒரு இனத்தின் வாழ்வியலை சர்வதேசத்துக்கு திறம்பட எடுத்துச் செல்வதற்கு சினிமாவைத் தவிர வேறு இலகுவான வழி கிடையாது.
சினிமா என்பது ஒரு கருத்தை அல்லது காட்சியை உயர்வர்க்கத்திலிருந்து அடிமட்டம் வரை கொண்டு செல்வதற்கு பயன்படுகின்ற எளிய ஊடகமாகத் திகழ்வதால் அது எல்லோராலும் விரும்பப்படுகின்றது.
மக்கள் மனதிலும் உலக அரங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஈழத் தமிழர்களின் போராட்டத்தோடு ஈழச் சினிமாவும் சமாந்தரமாகப் பயணிக்க வேண்டும்.
இதற்கு உயிர்கொடுக்கும் இளைஞர்களின் பங்களிப்புக்களை மென்மேலும் மேம்படுத்த வேண்டும். அவர்கள் நிச்சயம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஈழத்தமிழர்களின் போராட்டமான வாழ்வை யதார்த்தமாக பதிவு செய்தால் அதற்கு சிங்களவன் ஏற்படுத்துகின்ற தடையை விட தொப்புள் கொடி உறவுகள் என்று கூறிக் கொள்பவர்களால் ஏற்படும் தடைகள் தான் சொல்லி மாளாதவை...
தமிழகத்தில் இருந்து கொண்டு ஈழம் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களின் உண்மையான அக்கறைகள் எல்லாம் தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதியாக வாழ்பவனுக்கும் , தொப்புள் கொடி உறவுகளை வைத்து ஈழச் சினிமா எடுப்பவனுக்கும் நிச்சயம் புரிந்திருக்கும்.
போரில் வெந்துபோய் அடைக்கலம் தேடி வந்த ஈழத்தமிழர்களை பத்தோடு பதினொன்றாக, அடிமைகளாக தான் இவர்கள் நடாத்துகிறார்கள்.
குறித்த படத்தின் முழுமையான காட்சிகளும் தமிழ் நாட்டில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அனைத்துக் காட்சிகளும் முறையான அனுமதி பெற்ற பின்னர் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சில காட்சிகளை எடுப்பதற்கு சொல்லொனாத் துயரங்களை அனுபவித்திருக்கிறார் இதன் இயக்குனர்.
உதாரணமாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சி திருவான்மியூர் கடலில் படமாக்க திட்டமிடப்பட்டு இருந்தது. குறித்த காட்சி எடுப்பதற்கு முன்னரேயே திருவான்மியூர் பொலிஸாரின் அனுமதி வாங்கப்பட்டது.
ஆனால் படப்பிடிப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை அதுவும் இரவு இரண்டு மணியளவில் கிளைமேக்ஸ் காட்சியை நெருங்கிக் கொண்டிருக்கையில் திருவான்மியூர்ப் பொலிஸார் திடீரென படப்பிடிப்புத் தளத்துக்குள் வந்துள்ளனர்.
இதனைக் கண்டு பீதியடைந்த நடிகர்கள், தொழிநுட்பவியலாளர்கள் எல்லோரும் சிதறி ஓடியுள்ளனர். படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.
இயக்குனர் கைது செய்யப்பட்டு திருவான்மியூர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார்.
பொலிஸாரின் அவதூறான கேள்விகளையும் எதிர்கொண்டு ஒருவாறு வெளியே வந்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு சிரமங்களையும் வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகளையும் எதிர் கொண்டு இறுதியில் ஈழத்தமிழ் நண்பர்களின் உதவியுடன் ராமேஸ்வரம் கடலில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது.
அடுத்து மதுரையிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அங்கும் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் திரைக்கதை படமாக்கப்படும் போது பயன்படுத்திய (Working Stills Camera) கமராவைப் பிடுங்கிச் சென்றுள்ளனர்.
பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் கமரா திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இயக்குனரின் வீடும் காவல்துறையினரால் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஈழத்து திரைப்படங்களின் வரிசையில் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இந்த திரைப்படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இயக்குனரும் தயாரிப்பாளருமான நிரோஜனின் நேர்காணலும் திரைப்பட முன்னோட்டமும்...
இதுவரை வெளிவந்த ஈழத்து திரைப்படங்களிலிருந்து மாறுபட்டது இந்த திரைப்படம்!
இந்த கதையின் சாராம்சம். “ ஒரு சந்நியாசின் இலக்கு இறைவனை கண்டடைவது. ஒடும் நதியின் இலக்கு சமுத்திரத்தை சென்றடைவது.
ஒரு போராளியின் இலக்கு பூர்வீகத்தை வென்றெடுப்பதே “ வரலாற்று சுவடுகளை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சர்யமான நிஜம் தென்படும்.
சர்வாதிகாரத்தின் ஆயுள் ? அற்ப ஆயுள் என்பதே அது. போராட்டத்தில் பின்னடைவுகள் தோன்றலாம், மறையலாம் ஆனால் போராட்டம் மட்டுமே உறுதியானது இறுதியானது.
இதை உலகிற்கு உரக்கசொன்னவர்கள் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தேசத்திற்காகவும், தேசவிடுதலைக்காகவும் புதுவிடியலை உருவாக்கிய உன்னத தலைவர்கள்.
அந்த உன்னத தலைவர்கள் பலர் மாபெரும் புரட்சி செய்து அடக்குமுறையை அப்புறப்படுத்தி மக்களாட்சி மலர்ந்திட செய்திருக்கிறார்கள். அதில் சிலர் யுத்தகளத்தில் வீரமரணத்தையும் சந்தித்திருகின்றார்கள்.
ஆனால் அந்தமாசற்ற தலைவர்கள் இட்டு சென்றபாதையில் பல்லாயிரம் வீரர்கள் தொடர்ந்து போராட்டத்தை கையிலெடுத்து அறவழியோ? ஆயுதவழியோ? விடுதலைபோரை சிறந்தமுறையில் கையாண்டு அதில் ஈடு இணையில்லா வெற்றியை மக்களுக்கு பெற்றுத்தந்திருக்கின்றார்கள்.
இது உலகறிந்த உண்மை. இக்கதையில் வரும் நாயகனும் மேற்கோள் காட்டிய பல்லாயிரம் வீரர்களுள் ஒருவன்.
இப்படத்தின் கதை, வசனம், பாடலை வினுபாரதி எழுதியுள்ளார். இசை – நித்யன்கார்த்திக், ஒளிப்பதிவு – அகர்செங்குட்டுவன், எடிட்டிங் – மோகன், படத்தொகுப்பு – மோகன், சண்டைபயிற்சி – கஜினி குபேந்தர் மற்றும் எண்ணற்ற நடிகர், நடிகைகள் பங்கு பெற்றுள்ளனர்.
இத்திரைப்படத்தில் அன்பு, பாசம், ஏக்கம், துரோகம், கோபம், வீரம், முடிவு என அனைத்தையும் எதார்த்தமான உண்மைகளை அப்பட்டமாக கொண்டு அமைந்துள்ளது.
இதன் தயாரிப்பு – திரைக்கதை – இயக்கம் சி.நிரோஜன் D.F.Tech. இது இவரின் மூன்றாவது படைப்பு.
இந்த திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் தமிழீழ சுதந்திரப் பாடல் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுள்ளமை கூடுதல் தகவல்.
மாவீரர் நாளுக்கு முன்னதாகவே இந்த திரைப்படத்தினை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் கண் முன் கொண்டு வரப்பட உள்ளது.
ஆனால் குறித்த திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதற்கு ஆர்வமுள்ள நல்ல உள்ளங்களைத் தேடுகின்றார் இதன் இயக்குனர்.
புலம்பெயர் உறவுகளே கருவுக்கு உயிர் கொடுப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
கூட்டாளி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துகிறது தமிழ் சி.என்.என்.
"தடைகளையும் நெருக்கடிகளையும் கண்டு தனது இலட்சியங்களை மாற்றிக் கொள்பவன் எதனையும் அடைவதில்லை..."
[புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் இத்திரைப்படத்தின் விநியோக உரிமை தொடர்பாக கூட்டாளி திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான நிரோஜனுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் - 00919003125148 , 00919094740735 ]

0 comments:
Post a Comment