Trancilat to english


Get your own Digital Clock

தொடர்புகளுக்கு Mobile:- 0772380234 , Skype:- gokulatheepan , Email:- gokulatheepan@yahoo.com

Wednesday, July 11, 2012

கந்தப்பு ஜெயந்தனின் சுண்டுக்குளி பூவே பாடலை கேட்டு மகிழ....(காணொளி இணைப்பு)


வவுனியாக் கலைஞன் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசையில்சாந்தரூபனின் (அவுஸ்டேர்லியா) பாடல் வரிகளில்கந்தப்பு ஜெயரூபன் ,சசிக்குமார் குரலில் கிராமிய மண்வாசனை காதலை வெளிக்கொணரும் புதியபாடல்ஈழத்து மண்ணின் கிராமிய காதலை வெளிக்கொணரும் புத்தம் புதிய பாடலாக 13.7.2012 தனது பிறந்தநாளை முன்னிட்டு இசை அமைப்பாளர் இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் புதிய பாடலாகிய இப்பாடலை வெளியிட்டுள்ளார். 

காந்தள் பூக்கும் தீவிலே,யாழ்தேவி ,கண்ணோடு கண்கள் பேசுதே ,எங்கோ பிறந்தவளே, வவுனியா மண்ணே போன்ற பல லட்சகணக்கான ரசிகர்களின் மனங்களை வென்ற பாடல்கள் மத்தியில் இப்பொழுது புதிய பாடலாக இப்பாடல் கிராமிய மண் வாசனை கமழும் பாடலாக வெளிவந்துள்ளது . .இது முற்றிலும் வன்னி மண்ணின் கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய மற்றுமொரு படைப்பாக வெளிவந்துள்ளது.

இப்பாடலை எழுதியிருப்பவர் சாந்தரூபன்(அவுஸ்டேர்லியா) இப்பாடலை கந்தப்புஜெயரூபனோடு இணைந்து சசிகுமார் பாடியுள்ளார்.பாடலை கந்தப்பு ஜெயந்தன் இசை அமைத்துள்ளார்.இப்பாடலுக்கான ஒளி பதிவு மற்றும் படத்தொகுப்பினை பிரியந்தன் அமைத்துள்ளார்.இப்பாடலுக்கு நடித்துள்ளார்கள் துஜான்,கிறிஸ்டிவேயினி ,கிறிஸ்டி,மாணிக்கம் ஜெகன்,சுஜிவினி,பிரதீப் மற்றும் வவுனியா அரங்காலயா கலைஞர்கள்..ஈழத்தின் முன்னணி இசை குழுக்களில் ஒன்றான வவுனியா ராகஸ்வரம் இசைகுழு கலைஞர்கள். இப்பாடல் ஒரு கிராமிய காதலை வெளிபடுத்தும் நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.....பிரியந்தனின் கணனி வரைகலையில் மிகவும் அற்புதமான பாடலாக  மிகவும் வித்தியாசமாக வெளிவந்துள்ளது...


கந்தப்பு ஜெயந்தனின் சுண்டுக்குளி பூவேபாடல்

 இசை -கந்தப்புஜெயந்தன் பாடல் வரிகள் -சாந்தரூபன் பாடலை பாடியவர்கள் -கந்தப்பு ஜெயரூபன் ,சசிக்குமார்
 
பாடல் தயாரிப்பு ஒளிபதிவு ,எடிட்டிங் -பிரியந்தன் (ஸ்டார் மீடியா) பாடல் வெளியீடு -வவுனியா ராகஸ்வரம் இசைகுழு கலைஞர்கள்

Monday, July 2, 2012

+92, #90 இப்படி துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வருதா..?..ஜாக்கிரதை..!!!



உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து யார் செல்போனுக்காவது விஷமிகள் மிஸ்ட் கால் கொடுக்கிறார்கள். யாரோ அழைத்துள்ளார்களே என்று நினைத்து அந்த நபரும் அந்த எண்ணை திருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி மற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள் எடுத்துவிடுகின்றனர்.

அவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து பேசிவிட்டால் நாங்கள் கால்சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்கள் செல்போன் சேவை ஒழுங்காக உள்ளதா என்பதை அறியவே அழைத்தோம் என்று கூறி # 09 அல்லது # 90 என்ற எண்ணை அழுத்தி அவர்களுடைய எண்ணுக்கு அழைக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு நாம் அழைத்தால் நம் சிம் கார்டை குளோன் செய்து நாம் அதில் வைத்துள்ள எண்களை அழைத்து மோசடி செய்கிறார்கள்.

அதனால் இதுபோன்ற எண்களில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திரும்பி அழைக்க வேண்டாம். மேலும் செல்போனில் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து வைக்க வேண்டாம்.

இதுபோன்று மிஸ்ட் கால் வந்த எண்ணை மீண்டும் அழைத்து சுமார் 1 லட்சம் பேர் ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons